வர்த்தகம்

கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5.95 லட்சம் கோடி திரட்டல்

DIN

கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் கடன் பத்திர வெளியீடுகள் மூலம் ரூ.5.95 லட்சம் கோடியை திரட்டிக் கொண்டுள்ளன.
இதுகுறித்து செபி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2016-இல் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் இந்திய நிறுவனங்கள் தனியார் நிதி நிறுவனங்களுக்கு கடன் பத்திரங்களை ஒதுக்கீடு செய்ததன் மூலம் ரூ.5,95,627 கோடி மூலதனத்தை பெற்றன. கடந்த 2015-ஆம் ஆண்டில் இதே வழிமுறையில் திரட்டிய தொகை ரூ.4,76,311 கோடியுடன் ஒப்பிடும் போது இது 25 சதவீதம் அதிகமாகும். 2016-இல் நிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த கடன் பத்திர வெளியீடுகளின் எண்ணிக்கை 3,366 ஆகும். 2015-ஆம் ஆண்டில் இது 2,953-ஆக காணப்பட்டது.
சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் 375 கடன்பத்திர வெளியீடுகள் மூலம் ரூ.71,165 கோடியை திரட்டியதாக செபி புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள் விரிவாக்க திட்டங்களுக்காகவும், நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும், கடன் பத்திர வெளியீட்டில் இறங்கி நிதி திரட்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT