வர்த்தகம்

யெஸ் வங்கி லாபம் ரூ.882 கோடி

DIN

தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ. 882.63 கோடியை நிகர லாபமாகப் பெற்றதாக அறிவித்தது.
மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் அந்த வங்கி தெரிவித்திருப்பதாவது: அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ. 5,229.96 கோடியாக அதிகரித்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் வங்கி பெற்ற வருவாய் ரூ.4,122.12 கோடியாகும். வட்டி வருவாய் ரூ. 4,231.61 கோடியாகும். நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகரித்து ரூ. 882.63 கோடியை வங்கி ஈட்டியது.
மூன்றாம் காலண்டில் மொத்த அளவில் வாராக் கடன் விகிதம் 0.85 சதவீதமாக உள்ளது. நிகர அளவில் வாராக் கடன் விகிதம் 0.29 சதவீதமாகும். இவ்வாறு யெஸ் வங்கி அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT