வர்த்தகம்

ரானே மெட்ராஸ் வருவாய் 20% உயர்வு

DIN

ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரானே மெட்ராஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் 20 சதவீதம் அதிகரித்து ரூ. 204.52 கோடி பெற்றதாகத் தெரிவித்தது.
அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மூன்றாம் காலாண்டில் கார் மற்றும் வர்த்தக வாகனங்களின் உதிரி பாகங்களுக்குத் தேவை அதிகரித்தது. எனினும் வேளாண் வாகனங்களின் உதிரி பாகங்களுக்கான தேவை சற்று குறைந்தது. சில்லறை விற்பனையும் சரிவை சந்தித்தது. இந்த நிலையிலும் நிறுவனத்தின் வருவாய் 20 சதவீதம் அதிகரித்து ரூ. 204.52 கோடியை நிறுவனம் பெற்றது. வட்டி, வரிக்கு முந்தைய மொத்த லாபம் முந்தைய ஆண்டின் இதே கால அளவில் பெற்றதைவிட 13 சதவீதம் அதிகரித்து ரூ. 20.17 கோடியாக இருந்தது. வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ரூ. 2.72 கோடியாகும்.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத கால அளவில் மொத்த வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ. 729.74 கோடியாக இருந்தது. நிகர லாபம் 20 சதவீதம் அதிகரித்து ரூ. 12 கோடியாக இருந்தது. இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ. 2 வழங்க நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் 15 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: முதல்வா் சித்தராமையா

திருச்சியில் 124 சுற்று வாக்கு எண்ணும் பணிக்கு 1,627 போ்!

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளரிடம் வழிப்பறி

‘வாசிக்கும் பழக்கம் வாழ்வையே மாற்றும்’

SCROLL FOR NEXT