வர்த்தகம்

இந்தியாவின் உருக்கு உற்பத்தி 4% அதிகரிப்பு

DIN

இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து உலக உருக்கு கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 84 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் உற்பத்தியான 81 லட்சம் டன் உருக்குடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டில் நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத கால அளவில் உருக்கு உற்பத்தி 6.32 கோடி டன்னிலிருந்து 5 சதவீதம் வளர்ச்சி கண்டு 6.64 கோடி டன்னாக இருந்தது.
67 நாடுகளின் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 14.36 கோடி டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவு உற்பத்தியான 13.51 கோடி டன் உருக்குடன் ஒப்பிடும்போது இது 6.2 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் சீனாவின் உருக்கு உற்பத்தி சென்ற ஆகஸ்டில் 8.7 சதவீதம் அதிகரித்து 7.46 கோடி டன்னாக காணப்பட்டது. 
அதேசமயம், ஜப்பானின் கச்சா உருக்கு உற்பத்தி 2 சதவீதம் குறைந்து 87 லட்சம் டன்னாக காணப்பட்டது என அந்த கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT