வர்த்தகம்

பாரத ஸ்டேட் வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை குறைத்து அறிவிப்பு

DIN

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிச் சேவையில் முதன்மையாகத் திகழ்கிறது பாரத ஸ்டேட் வங்கி. இதில் தற்போது வங்கிக் கணக்கு தொடர்பான சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் விரிவடைந்த ஒரு வங்கியாகத் திகழ்ந்த பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளரின் குறைந்தபட்ச கணக்கு இருப்புத் தொகையாக ரூ.500 இருந்தது. இதனை சமீபத்தில் ரூ.5000-ஆக உயர்த்தி உத்தரவிட்டது.

அதன்படி நகர்புறக் கிளைகளில் கணக்கு வைத்திருந்தால் ரூ.5000, துணை நகரங்களில் ரூ.3000 மற்றும் ரூ.2000, கிராமப்புறங்களில் ரூ.1000 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் இந்த வங்கிச் சேவையின் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். சிறுசேமிப்பு காரணமாக வங்கிக் கணக்கு வைத்திருந்தவர்களுக்கு இது பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இந்த வங்கியின் இதர சேவைகளுக்கும் சர்வீஸ் தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை குறைத்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தற்போது புதிய அறிவிப்பின்படி நகர்புறம் மற்றும் துணை நகரம் ஆகியவை இணைக்கப்பட்டன. அதன்படி இவ்விறு பிரிவுகளில் வங்கிக் கணக்கு உள்ள வாடிக்கையாளரின் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.3000-ஆக மாற்றப்பட்டது.

ஆனால், குறைந்தபட்ச வைப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதத் தொகை மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி நகர்புற, துணை நகர கணக்குளுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.50-ஆகவும், கிராமப்புறங்களில் ரூ.20-ல் இருந்து ரூ.40-ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த அபராத்தொகையுடன் ஜிஎஸ்டி இணைத்து வசூலிக்கப்படும்.

பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் திறக்கப்பட்ட தனிநபர் வங்கிக் கணக்கு, ஓய்வூதியர்கள் வங்கிக் கணக்கு, 18 வயதுக்குட்பட்டோர் வங்கிக் கணக்கு ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த புதிய நடைமுறை அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

விசாரணைக்காக போலீஸாா் அழைத்து சென்ற இளைஞரின் உறவினா்கள் போராட்டம்

துறையூா் அருகே வாகனம் மோதி மான் உயிரிழப்பு

கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்றவா் கைது

பாலியல் துன்புறுத்தல்: தந்தைக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT