வர்த்தகம்

கம்ப்யூட்டர் விற்பனை 28% அதிகரிப்பு

DIN


நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மூன்று மாத காலத்தில் கம்ப்யூட்டர் விற்பனை 28.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கான தேவையில் காணப்பட்ட விறுவிறுப்பையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,-ஜூன்) 22.50 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 28.1 சதவீதம் அதிகமாகும்.
ஒட்டுமொத்த விற்பனையில் ஹெச்பி நிறுவனம் வழக்கம்போல் தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கம்ப்யூட்டர் விற்பனையில் இந்நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 31.6 சதவீதமாகும். 
இதைத் தொடர்ந்து, டெல் நிறுவனம் 23.7 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தையும், லெனேவா 18 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
அனைத்து வகையான கம்ப்யூட்டர் விற்பனையில் நோட்புக்கின் பங்களிப்பானது 61 சதவீதமாக உள்ளது. நுகர்வோர் மற்றும் வர்த்தக பிரிவில் இதற்கான தேவை ஆண்டுக்கு 45.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஒட்டுமொத்த நோட்புக்ஸ் விற்பனையில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக 11 சதவீதாக இருந்த அல்ட்ரா-சிலிம் நோட்புக்ஸின் பங்களிப்பு தற்போது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பிசி எனப்படும் தனிநபர் கம்ப்யூட்டர் விற்பனை என்பது மதிப்பீட்டு காலத்தில் 33.7 சதவீதம் அதிகரித்து 10.9 லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. வர்த்தக பயன்பாடுகளுக்கான கம்ப்யூட்டர் விற்பனை 23.3 சதவீதம் உயர்ந்து 11.7 லட்சமாக காணப்பட்டது. இதற்கு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் புதிய கம்ப்யூட்டருக்கான தேவை அதிகரித்ததே முக்கிய காரணம்.
கல்வித் துறையில் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு புதிய திட்டங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் தேவை அதிகரிப்பு ஆகியவையும் கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளதாக ஐடிசி அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT