வர்த்தகம்

முக்கிய எட்டு துறைகளில் 6.6 சதவீதம் வளர்ச்சி

DIN


முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி சென்ற ஜூலை மாதத்தில் 6.6 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி நடப்பு 2018-ஆம் ஆண்டு ஜூலையில் 6.6 சதவீதமாக இருந்தது. 
கடந்தாண்டு இதே கால அளவில் இத்துறைகளின் வளர்ச்சி 2.9 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது.
நிலக்கரி, சுத்திகரிப்பு பொருள்கள், உரம் மற்றும் சிமென்ட் துறைகளின் வளர்ச்சி முறையே 9.7 சதவீதம், 12.3 சதவீதம், 1.3 சதவீதம், 10.8 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டன.
இத்துறைகளின் உற்பத்தி சிறப்பாக இருந்தபோதிலும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு துறைகளின் உற்பத்தி ஜூலை மாதத்தில் பின்னடைவைக் கண்டன.
மேலும், உருக்கு துறையின் உற்பத்தியும் 9.4 சதவீதத்திலிருந்து சரிந்து 6 சதவீதமானது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத கால அளவில் இந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் 2.6 சதவீதமாக காணப்பட்டது.
நடப்பாண்டு ஜூன் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சியானது 7.6 சதவீதமாக காணப்பட்டது என மத்திய அரசுஅந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT