வர்த்தகம்

வால்வோ கார்களின் விலை 5% உயரும்

DIN

கார்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வால்வோ கார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சார்லஸ் ஃப்ரம்ப் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
வரும் 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் கார்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு கணிசமான அளவில் உயர்த்தியுள்ளது. இதனை, செலவினை ஈடுகட்டும் வகையில் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி, அனைத்து விதமான கார்களின் விலையையும் 5 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். சுங்க துறையின் மூலம் இனி விடுவிக்கப்படும் வாகனங்கள் அனைத்தின் மீதும் புதிய விலை உயர்வு அமல்படுத்தப்படும்.
வாகன இறக்குமதிக்கான வரி உயர்த்தப்பட்டது மோட்டார் வாகன துறையில் குறுகிய கால விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT