வர்த்தகம்

டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் லாபம் 11% உயர்வு

DIN


முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் (முன்பு டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா) இரண்டாம் காலாண்டு தனிப்பட்ட நிகர லாபம் 11.6 சதவீதம் உயர்ந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.26.26 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.29.53 கோடியானது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.24.88 கோடியிலிருந்து 11.6 சதவீதம் அதிகரித்து ரூ.27.79 கோடியை எட்டியது.
செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆறு மாத காலத்தில் மொத்த வருவாய் ரூ.26.26 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.33.42 கோடியாகவும், தனிப்பட்ட நிகர லாபம் ரூ.24.24 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.30.22 கோடியாகவும் இருந்தது என டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT