வர்த்தகம்

யூகோ வங்கி இழப்பு ரூ.1,136 கோடி

DIN

பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர இழப்பு ரூ.1,136.44 கோடியை எட்டியுள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
 யூகோ வங்கியின் மொத்த வருவாய் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.3,749.18 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.3,757.51 கோடியாக காணப்பட்டது. வாராக் கடன் அதிகரிப் பையடுத்து, வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.633.88 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.1,136.44 கோடியைத் தொட்டுள்ளது.
 செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 19.74 சதவீதத்திலிருந்து அதிகரித்து 25.37 சதவீதத்தை எட்டியுள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் 9.98 சதவீதத்திலிருந்து உயர்ந்து 11.97 சதவீதமாகியுள்ளது. வாராக் கடன் அதிகரித்துள்ளதையடுத்து, அதற்கான ஒதுக்கீட்டுத் தொகை ரூ.1,323.36 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,410.94 கோடியாக இருந்தது என யூகோ வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT