வர்த்தகம்

ஐஎல்&எஃப்எஸ்: மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்க 3 ஆலோசகர்கள் நியமனம்

DIN


கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஐஎல்&எஃப்எஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் வகையில் மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்க 3 ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடனில் சிக்கி தத்தளித்து வரும் நிறுவனத்தை மீட்கும் வகையிலான மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்கவும், அதனை செயல்படுத்தவும் ஏதுவாக மூன்று ஆலோசகர்களை ஐஎல்&எஃப்எஸ் நிர்வாக குழு நியமித்துள்ளது. 
அதன்படி, ஆர்ப்வுட் கேபிடல் மற்றும் ஜேஎம் பைனான்ஸியல் ஆகிய இரு நிறுவனங்கள் நிதி மற்றும் பரிவர்த்தனை ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அல்வரிஸ் அண்டு மார்சல் (ஏ&எம்) நிறுவனம் மறுசீரமைப்பு திட்டத்துக்கான வியூகங்களை வகுக்கும் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து ஐஎல்&எஃப்எஸ் நிறுவனத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைகளை புதிய நிர்வாக குழுவிடம் வழங்கும். ஆர்ப்வுட் கேபிடல் மற்றும் ஜேஎம் பைனான்ஸியல் ஆகிய இரு நிறுவனங்கள் நிறுவனத்தின் பங்கு விலக்கல் மற்றும் நிதி திரட்டுவது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மார்ச் நிலவரப்படி ஐஎல்&எஃப்எஸ் நிறுவனம், வங்கிகள் இதர கடன் நிறுவனங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகை ரூ.91,000 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்நிறுவனம் உடனடியாக ரூ.3,000 கோடி மூலதனத்தை பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
மேலும், ரூ.4,500 கோடிக்கு உரிமைப் பங்குகளை வெளியிடவும் ஐஎல்&எஃப்எஸ் திட்டமிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT