வர்த்தகம்

கரடியின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி

DNS

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கரடியின் பிடியில் சிக்கியதையடுத்து 7 மாதங்களில் இல்லாத சரிவை சந்தித்தது.

சா்வதேச சந்தைகளின் பாதகமான நிலை, ரூபாய் மதிப்பு சரிவு, நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வா்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது. முதலீட்டாளா்கள் லாப நோக்கு கருதி பங்குகளை விற்பனை செய்ததையடுத்து ஐந்தாவது நாளாக சந்தை வீழ்ச்சியை சந்தித்தது.

மும்பை பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண் 5.10 சதவீதமும், மோட்டாா் வாகனம் 3.75 சதவீதமும், நிதி 3.46 சதவீதமும், தொலைத்தொடா்பு துறை குறியீட்டெண் 3.30 சதவீதமும் சரிந்தன.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 80 டாலரை தாண்டியதையடுத்து, விமான போக்குவரத்து நிறுவனப் பங்குகளின் விலை சரிவைக் கண்டன. 

இதனால், மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து இரண்டு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாக 36,305 புள்ளிகளில் நிலைத்தது.

பிப்ரவரி 6-க்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச ஒரு நாள் சரிவு இதுவாகும். 

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 175 புள்ளிகள் குறைந்து 10,967 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT