வர்த்தகம்

முக்கிய 8 துறைகள் உற்பத்தி 2.1%-ஆக குறைவு

DIN


முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சென்ற பிப்ரவரி மாதத்தில் 2.1 சதவீதமாக குறைந்தது.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 5.4 சதவீதமாக காணப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டில் இது 2.1 சதவீதமாக சரிந்துள்ளது.   கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு பொருள்கள் துறையின் உற்பத்தி விகிதம் முறையே 6.1 சதவீதம் மற்றும் 0.8 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைக் கண்டதே இந்த சரிவுக்கு முக்கிய காரணம்.
இவை தவிர, உரத் துறையின் உற்பத்தி 5.2 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகவும், உருக்குத் துறையின் உற்பத்தி 5 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாகவும், சிமெண்ட் துறையின் உற்பத்தி 23 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகவும், எரிசக்தி துறையின் உற்பத்தி 4.6 சதவீதத்திலிருந்து 0.7 சதவீதமாகவும் குறைந்துள்ளன. 
இத்துறைகளின் உற்பத்தி குறைந்து போன நிலையிலும், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி முறையே 7.3 சதவீதம் மற்றும் 3.8 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளன. சென்ற 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத கால அளவில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 4.3 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT