வர்த்தகம்

அலாகாபாத் வங்கிக்கு மத்திய அரசு ரூ.5,000 கோடி கூடுதல் மூலதனம்

DIN

பொதுத் துறையைச் சேர்ந்த அலாகாபாத் வங்கிக்கு மத்திய அரசு ரூ.5,000 கோடியை அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் மூலதனமாக வழங்கியுள்ளது. 
இதுகுறித்து அலாகாபாத் வங்கி பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபிக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அலாகாபாத் வங்கியில் மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.3,000 கோடியாக இருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் மூலதனத்தை அதிகரிக்கும் முடிவை எடுத்துள்ளது. இதையடுத்து, வங்கிக்கு ரூ.5,000 கோடியை அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக மத்திய அரசு அளித்துள்ளது. இதையடுத்து, வங்கியில் மத்திய அரசின் மூலதனம் ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.8,000 கோடியாக உயர்ந்துள்ளது என அந்த அறிக்கையில் அலகாபாத் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் உயர்த்தப்பட்டதன் விளைவாக, அலகாபாத் வங்கி மேலும் நிதி திரட்டிக் கொள்ளும் அதிகபட்ச உச்சவரம்பு ரூ.8,000 கோடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT