வர்த்தகம்

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் லாபம் 7% உயர்வு

DIN

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸின் முதல் காலாண்டு லாபம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
 இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சித்தார்த்தா மொஹந்தி கூறியதாவது:
 நிறுவனத்தின் வர்த்தக சூழல் தொடர்ந்து சவாலாகவே இருந்து வருகிறது. இருந்தபோதிலும், முதல் காலாண்டில் நிலையான வளர்ச்சி தக்கவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வீட்டு கடன் பிரிவில் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது.
 இதன் காரணமாக, எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ரூ.4,815.57 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.4,068.93 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
 நிகர லாபம் ரூ.567.18 கோடியிலிருந்து 7.39 சதவீதம் அதிகரித்து ரூ.609.13 கோடியை எட்டியது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT