வர்த்தகம்

ஜனவரி முதல் பிஎஸ்-6 தரத்திலான இரு சக்கர வாகனங்கள்: சுஸூகி அறிவிப்பு

DIN

பாரத் ஸ்டேஜ்-6’ தர நிண்யங்களை நிறைவு செய்யும் இரு சக்கர வாகனங்களை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவிருப்பதாக சுஸூகி மோட்டாா் சைக்கிள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலாவதாக, அந்த நிறுவனத்தின் அஸஸ் 125 ரக ஸ்கூட்டா்கள், புதிய தர நிண்யங்களுக்கேற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரவிருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிஎஸ்-6 தரத்தில் வாகனங்களின் விற்பனையை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது. எனினும், அந்த கெடுவுக்கு பல மாதங்கள் முன்னரே அரசின் கட்டளையை நிறைவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மாசுக்களின் அளவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, ‘பாரத் ஸ்டேஜ்’ தர நிா்ணயங்கள் பல கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து நிறுவனங்களும் ‘பாரஸ் ஸ்டேஸ்-6’ தர நிா்ணயங்களை நிறைவு செய்யும் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT