வர்த்தகம்

லம்போர்கினி ஹுரகன் இவோ' கார் இந்தியாவில் அறிமுகம்

DIN


இத்தாலி நாட்டைச் சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் அதன் ஹுரகன் இவோ' காரை இந்தியாவில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து லம்போர்கினி இந்தியா நிறுவனத்தின்  தலைவர் சரத் அகர்வால் கூறியதாவது:
லம்போர்கினி நிறுவனம் கடந்தாண்டில் எஸ்யுவி வகையைச் சேர்ந்த உருஸ்' காரை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, இந்தியாவில் ஒரு பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் எங்களின் புதிய அறிமுகத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தனர்.
அவர்களின்  ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ஹுரகன் இவோ என்ற புதிய  வகை சொகுசு காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 
பஹ்ரைனில் இந்த கார்  வெளியிடப்பட்ட பிறகு, உலகளவில் முதலாவதாக இந்திய சந்தையில் தான் ஹுரகன் இவோ அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.3.73 கோடியாகும்.
இந்தியாவில் ஒட்டுமொத்த சூப்பர் சொகுசு கார் பிரிவில் கடந்த 2018-இல் லம்போர்கினி முன்னிலையில் இருந்தது. நடப்பாண்டிலும் எங்களின் இடத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.
லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் கடந்த 2018-இல் 45 கார்களை விற்பனை செய்துள்ளது. 2017-இல் 26 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது.  
உலகளவில் லம்போர்கினி கடந்தாண்டில் 5,750 கார்களை விற்பனை செய்துள்ளது. குறிப்பாக, ஆசியா பசிபிக் மண்டலத்தில் மட்டும் 1,301 கார்கள் விற்பனையாகியுள்ளன. 2017-ஆம் ஆண்டில் விற்பனை எண்ணிக்கை 1,000-ஆக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT