வர்த்தகம்

குஜராத்தில் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைக்கிறது அதானி கிரீன் எனர்ஜி

DIN

அதானி கிரீன் எனர்ஜியின் துணை நிறுவனமான அதானி ரினியூவபிள் எனர்ஜி பார்க்    குஜராத்தில் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைக்க ஒப்பந்தப் புள்ளியைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அதானி கிரீன் எனர்ஜி பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

குஜராத்தில் சூரியசக்தி மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அதற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை குஜராத் ஊர்ஜா விகாஸ் நிகம் கோரியிருந்தது. அதில் கலந்து கொண்ட அதானி கிரீன் எனர்ஜிக்கு முற்றிலும் சொந்தமான அதானி ரினியூவபிள் எனர்ஜி பார்க் நிறுவனம் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை  அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை பெற்றுள்ளது என்று அதானி கிரீன் எனர்ஜி செபியிடம் தெரிவித்துள்ளது.

தற்போது அமைக்கப்படவுள்ள இந்த சூரியமின் உற்பத்தி  திட்டம் வரும் 2020-21-ஆம் நிதி ஆண்டில் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT