வர்த்தகம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி கடன்: வங்கிகள் கூட்டமைப்பு பரிசீலனை

DIN

கடன் சுமையில் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு இடைக்கால நிதியாக ரூ.500 கோடி கடன் அளிப்பதற்கு பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு பரிசீலித்து வருகிறது.

அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் சுனில் மேத்தா, இதுகுறித்து மேலும் கூறியதாவது:

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த விரும்புகிறது. இதற்காக, வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனத்துக்கு இடைக்கால கடனுதவி அளிப்பதற்கு பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு தயாராக உள்ளது. கடனுதவி அளிப்பதால், மதிப்பும் உயர்த்தப்படும்.

மேலும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடனுதவி அளிப்பது குறித்து வங்கிகள் கூட்டமைப்பு ஏற்கெனவே விவாதித்து வருகிறது. எனினும், இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வாரியக் குழு கூட்டம், கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடனுதவி அளிக்கும் வங்கிகளை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT