வர்த்தகம்

வோல்வோ கார் விற்பனை 11 சதவீதம் அதிகரிப்பு

DIN


சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஸ்வீடன்  நாட்டைச் சேர்ந்த வோல்வோ நிறுவனத்தின் ஜனவரி-ஜூன் மாதம் வரையிலான விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து வோல்வோ கார்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சார்லஸ் ஃப்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2018 ஜனவரி-ஜூன் வரையிலான ஆறுமாத காலகட்டத்தில் நிறுவனம் 1,044 கார்களை விற்பனை செய்திருந்தது. நடப்பாண்டின் இதே காலத்தில் கார் விற்பனை 11 சதவீதம் அதிகரித்து 1,159-ஐ எட்டியுள்ளது.
மோட்டார் வாகன துறை மந்த கதியில் இருந்தபோதிலும் நிறுவனம் பெற்றுள்ள இந்த வளர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் விற்பனை சந்தை தற்போதைய சரிவிலிருந்து மீண்டு வரும் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது என்றார் அவர்.
கடந்தாண்டில் இந்நிறுவனத்தின் கார் விற்பனை 30 சதவீதம் உயர்ந்து 2,638-ஆக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT