வர்த்தகம்

வென்ட் இந்தியா வருவாய் ரூ.33 கோடி

DIN


முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வென்ட் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.33.64 கோடியாக குறைந்துள்ளது. கடந்தாண்டில் இதே கால கட்டத்தில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் குறைவாகும்.
உள்நாட்டு விற்பனை 4 சதவீதம் குறைந்து ரூ.24.47 கோடியாக காணப்பட்டது. ஏற்றுமதியும் 16 சதவீதம் சரிந்து ரூ.9.17 கோடியாக இருந்தது. வரிக்கு பிந்தைய லாபம் 14 சதவீதம் குறைந்து ரூ.3.85 கோடியாக காணப்பட்டது.
ஒட்டுமொத்த அடிப்படையில் நிறுவனத்தின் விற்பனை ஜூன் காலாண்டில் 5 சதவீதம் குறைந்து ரூ.39.42 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் 33 சதவீதம் சரிந்து ரூ.3.59 கோடியாகவும் இருந்தது.
மோட்டார் வாகன துறையில் ஏற்பட்ட மந்த நிலையால் நிறுவனத்தின் வருவாய் சரிந்துள்ளது. அதேபோன்று, சர்வதேச சுணக்க நிலையால் ஐரோப்பா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வாகன உதிரிபாகங்களுக்கான தேவை குறைந்து போனதையடுத்தும் ஏற்றுமதியும் பின்னடைவை கண்டுள்ளதாக வென்ட் இந்தியா செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT