வர்த்தகம்

பணவீக்கம் 2 ஆண்டுகள் காணாத அளவில் சரிவு

DIN

உணவுப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து சென்ற மே மாதத்தில் பணவீக்கம் 22 மாதங்கள் காணாத அளவுக்கு குறைந்துள்ளது. 
இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் சென்ற மே மாதத்தில் 2.45 சதவீதமாக குறைந்துள்ளது. இது, நடப்பாண்டு ஏப்ரலில் 3.07 சதவீதமாகவும், 2018 மே மாதத்தில் 4.78 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலையில் மொத்தவிற்பனை விலை பணவீக்கம் 1.88 சதவீதமாக மிகவும் குறைந்த அளவில் காணப்பட்டது. ஆனால், அதன் பிறகு அதிகரித்து வந்த இப்பணவீக்கம் 22 மாதங்களுக்குப் பிறகு சென்ற மே மாதத்தில் தான் இந்த அளவுக்கு குறைந்துள்ளது. இதற்கு,  உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள்கள் விலையில் ஏற்பட்ட சரிவே மிக முக்கிய காரணம்.
நடப்பாண்டு ஏப்ரலில் 7.37 சதவீதமாக அதிகரித்து காணப்பட்ட உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் மே மாதத்தில் 6.99 சதவீதமாக குறைந்தது. இருப்பினும், வெங்காயத்தின் விலை -3.43 சதவீதத்திலிருந்து 15.89 சதவீதமாக உயர்ந்தது.
பருப்பு வகைகளுக்கான பணவீக்கம் 14.32 சதவீதத்திலிருந்து அதிகரித்து 18.36 சதவீதமாக தொடர்ந்து இரட்டை இலக்கமாகவே உள்ளது. 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக,  எரிபொருள்களுக்கான பணவீக்கம் 3.84 சதவீதத்திலிருந்து வீழ்ச்சியடைந்து 0.98 சதவீதமானது.
நடப்பாண்டு மார்ச் மாதத்துக்கான பணவீக்கம் தற்காலிக மதிப்பீட்டில் 3.18 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 3.10 சதவீதம் என குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT