வர்த்தகம்

ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் லாபம் ரூ.2,862 கோடி

DIN


 ஹெச்டிஎஃப்சி நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.2,862 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் ரூ.11,586.58 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த 2017-18  நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.9,322.36 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகம்.
குறிப்பாக, நிறுவனத்தின் நிகர வட்டி  வருமானம் ரூ.2,650 கோடியிலிருந்து 19 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.3,161 கோடியை எட்டியுள்ளது.
வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து ஜனவரி-மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,257 கோடியிலிருந்து 26.8 சதவீதம் அதிகரித்து ரூ.2,862 கோடியானது.
கடந்த 2018-19 நிதியாண்டுக்கு இறுதி ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.17.50 வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.3.50 வழங்கப்பட்ட நிலையில் கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு மொத்தம் ரூ.21 ஈவுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
2017-18 நிதியாண்டில் பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஈவுத்தொகை வழங்கப்பட்டது என அந்த அறிக்கையில் ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT