வர்த்தகம்

லக்ஷ்மி விலாஸ் வங்கி நிகர இழப்பு ரூ.264 கோடி

DIN


லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர இழப்பு கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.264.43 கோடியாக குறைந்துள்ளது. இது, 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ரூ.373.49 கோடியாக காணப்பட்டது.
நடப்பாண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.51,235 கோடியாக இருந்தது. கடந்த 2018 மார்ச் மாதத்தில் காணப்பட்ட மொத்த வணிகமான ரூ.60,314 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 15.05 சதவீதம் குறைவாகும்.
வழங்கப்பட்ட கடன் ரூ.27,005 கோடியிலிருந்து 18.70 சதவீதம் குறைந்து ரூ.21,956 கோடியாகி உள்ளது. அதேபோன்று திரட்டப்பட்ட மொத்த டெபாசிட்டும் ரூ.33,309 கோடியிலிருந்து 12.10 சதவீதம் சரிந்து ரூ.29,279 கோடியாகி உள்ளது என செய்திக்குறிப்பில் லக்ஷ்மி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT