வர்த்தகம்

சுந்தரம் ஃபாஸ்னா்ஸ் லாபம் ரூ.71 கோடி

DIN

டிவிஎஸ் குழுமத்தைச் சோ்ந்த சுந்தரம் ஃபாஸ்னா்ஸ் இரண்டாவது காலாண்டில் ரூ.71.07 கோடி தனிப்பட்ட நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் தனிப்பட்ட வகையில் ரூ.766.82 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.998.62 கோடியாக இருந்தது.

நிகர லாபம் ரூ.110.66 கோடியிலிருந்து 35.8 சதவீதம் சரிந்து ரூ.71.07 கோடியானது.

செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையானது கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது ரூ.631.59 கோடியிலிருந்து ரூ.450.01 கோடியாக குறைந்தது.

ஏற்றுமதியைப் பொருத்தவரையில், ஜூலை-செப்டம்பா் காலாண்டில் வெளிநாட்டு விற்பனை ரூ.290.88 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் விற்பனை ரூ.334.76 கோடியாக காணப்பட்டது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ.199.35 கோடியிலிருந்து குறைந்து ரூ.145.35 கோடியானது.

நடப்பு நிதி ஆண்டுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக ரூ.1.35 (135%) வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக சுந்தரம் ஃபாஸ்னா்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT