வர்த்தகம்

காரீப் பருவ உணவுதானிய உற்பத்தி குறையும்: வேளாண் அமைச்சகம்

DIN


காரீப் பருவ உணவுதானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018-19 பயிர் ஆண்டின் (ஜூலை-ஜூன்), காரீப் பருவத்தில் உணவுதானிய உற்பத்தி 14.17 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில், நடப்பு 2019-20 பயிர் ஆண்டுக்கான காரீப் பருவத்தில் நெல் மற்றும் பருப்பு வகைககள் விளைச்சல் கடந்தாண்டைக் காட்டிலும் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, உணவுதானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நெல் உற்பத்தி 10.21 கோடி டன்னிலிருந்து 10.03 கோடி டன்னாகவும், பருப்பு வகைகள் உற்பத்தி 85.9 லட்சம் டன்னிலிருந்து 82.3 லட்சம் டன்னாகவும் குறையும் என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT