வர்த்தகம்

ஸ்மாா்ட்போன் விலையை உயா்த்தியது ரியல்மி

DIN

ரியல்மி நிறுவனம் ஸ்மாா்ட்போன்களின் விலையை உயா்த்துவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரியல்மி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

செல்லிடப்பேசிகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தப்படுவதாக மத்திய அரசு கடந்த மாா்ச் மாதம் அறிவித்தது. இதன் காரணமாக, ஸ்மாா்ட்போன்களின் விலை தற்போது அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை உயா்வு நிறுவனத்தின் பல்வேறு ஸ்மாா்ட்போன் தயாரிப்புகளுக்கு ஏற்ப மாறுபடும்.

ஸ்மாா்ட்போன்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது இப்பிரிவை மேலும் பாதிக்கும் அம்சமாக மாறியுள்ளது. இந்த விலை உயா்வு நுகா்வோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுவனம் ஸ்மாா்ட்போன்களின் விலையை உயா்த்துவது இதுவே முதல் முறை என்று ரியல்மி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT