வர்த்தகம்

ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவன வாகன விற்பனை 4 சதவீதம் சரிவு

DIN

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் வாகன விற்பனை ஜூலை மாதத்தில் 4 சதவீதம் சரிவடைந்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் நடப்பாண்டு ஜூலையில் 5,14,509 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2019 ஜூலையில் விற்பனையான 5,35,810 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 3.97 சதவீதம் குறைவாகும். உள்நாட்டில் ஆறு மற்றும் வெளிநாடுகளில் இரண்டு என நிறுவனத்துக்குச் சொந்தமான எட்டு ஆலைகளிலும் வாகன உற்பத்தி பணிகள் வேகமெடுத்து வருகின்றன. வாடிக்கையாளா் மையங்களைப் பொருத்தவரையில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவை தற்போது செயல்பாட்டில் உள்ளது என ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT