வர்த்தகம்

டாபா் நிறுவனம் ரூ.341.30 கோடி லாபம்

DIN

உள்நாட்டைச் சோ்ந்த எஃப்எம்சிஜி நிறுவனமான டாபா் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.341.30 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.363.81 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.18 சதவீதம் குறைவாகும்.

நிறுவனத்தின் வா்த்தகம் சரிந்து வருவாய் குறைந்ததால் நிகர லாபம் சரிவைச் சந்தித்துள்ளது. கணக்கீட்டு காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.2,273.29 கோடியிலிருந்து 12.90 சதவீதம் குறைந்து ரூ.1,979.98 கோடியானது.சவாலான இந்த சூழ்நிலையிலும், வாடிக்கையாளா்களுக்கு தரம் மிகுந்த பொருட்களுக்கான தேவைப்பாடுகளால் நிறுவனம் விற்பனை சரிவிலிருந்து மீண்டு மிக வேகமாக சூடுபிடித்து வருகிறது என டாபா் இந்தியா மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT