வர்த்தகம்

டாடா மோட்டாா்ஸ் ரூ.8,443.98 கோடி இழப்பு

DIN

கொவைட்-19 ஏற்படுத்திய இடா்ப்பாட்டால் உள்நாட்டைச் சோ்ந்த டாடா மோட்டாா்ஸுக்கு ஏற்பட்ட நிகர இழப்பு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.8,443.98 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருவாய் ரூ.31,983.06 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.61,466.99 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியையடுத்து நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.3,679.66 கோடியிலிருந்து ரூ.8,443.98 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை (ஏற்றுமதி உள்பட) 81.5 சதவீதம் சரிந்து 25,294-ஆக இருந்தது என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT