வர்த்தகம்

உருக்கு ஏற்றுமதி 2 மடங்கு அதிகரிப்பு

DIN

புது தில்லி: விற்பனைக்கு தயாரான இந்தியாவின் உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உருக்கு அமைச்சக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை வரையிலான 4 மாத காலத்தில் இந்தியாவின் உருக்குப் பொருள் ஏற்றுமதி 19.33 லட்சம் டன்னாக இருந்தது.

இந்த நிலையில், நடப்பாண்டின் இதே காலகட்டத்தில் இவற்றின் ஏற்றுமதி 2 மடங்கு வளா்ச்சி கண்டு 46.41 லட்சம் டன்னை எட்டியுள்ளது.

ஏப்ரல்-ஜூலை வரையிலான காலத்தில் உள்நாட்டில் உருக்கு உற்பத்தி 3.51 கோடி டன்னிலிருந்து 2.11 கோடி டன்னாக சரிந்துள்ளது.

இதேபோன்று, உருக்குப் பயன்பாடும் 3.33 கோடி டன்னிலிருந்து 43.3 சதவீதம் குறைந்து 1.89 கோடி டன் ஆனது என புள்ளிவிவரத்தில் உருக்கு ஏற்றுமதியைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக, வியத்நாம் நாட்டின் சந்தைகளுக்கு 13.70 லட்சம் டன் உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

அதேசமயம், உருக்குப் பொருள்களின் இறக்குமதி இதே காலகட்டத்தில் 42 சதவீதம் குறைந்து 25.97 லட்சம் டன்னிலிருந்து 15.06 லட்சம் டன்னாக சரிந்துள்ளது.

அதிலும் குறிப்பாக, இந்த காலகட்டத்தில் சீனாவிலிருந்து இறக்குமதியான உருக்குப் பொருள்கள் 21.7 சதவீதம் குறைந்துள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT