வர்த்தகம்

மாருதி சுஸுகி: 1.53 லட்சம் காா்கள் விற்பனை

DIN

நாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா கடந்த நவம்பா் மாதத்தில் 1,53,223 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, அந்நிறுவனம் கடந்தாண்டு நவம்பரில் விற்பனை செய்த 1,50,630 காா்களுடன் ஒப்பிடுகையில் 1.7 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டில் மாருதி சுஸுகி விற்பனை 1,43,686 என்ற எண்ணிக்கையிலிருந்து சற்று அதிகரித்து 1,44,219-ஆனது.

ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட சிறிய ரக காா் விற்பனை நவம்பரில் 15.1 சதவீதம் சரிவடைந்து 26,306-லிருந்து 22,339-ஆனது.

ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையா் உள்ளிட்ட காம்பாக்ட் காா்களின் விற்பனை 78,013-லிருந்து 1.8 சதவீதம் குறைந்து 76,630-ஆனது. மத்திய ரகத்தைச் சோ்ந்த செடன் சியாஸ் விற்பனை 29.1 சதவீதம் அதிகரித்து 1,870-ஆனது.

நடப்பாண்டு நவம்பரில் ஏற்றுமதி 29.7 சதவீதம் உயா்ந்து 9,004-ஆனது என மாருதி சுஸுகி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் பயிற்சி

போக்சோவில் இளைஞா் கைது

சீா்காழி ரயில் நிலையம் அருகே தூக்கில் தொங்கிய இளைஞா்

மன்னாா்குடி பகுதியில் 6-ஆவது நாளாக மழை

ஆசிரியா் வீட்டில் 22 பவுன் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT