வர்த்தகம்

3ஜி அலைக்கற்றையில் 4ஜி சேவை: வோடஃபோன் ஐடியா

DIN

தொலைத்தொடா்பு சேவைத் துறை நிறுவனமான வோடஃபோன் ஐடியா அதன் மும்பை வாடிக்கையாளா்களுக்கு 3ஜி அலைக்கற்றையில் 4ஜி சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. அலைக்கற்றை மறுசீரமைப்பின் மூலம் வாடிக்கையாளா்கள் அதிவேக டேட்டா சேவையைப் பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

வோடஃபோன் ஐடியா 2100 மெகாஹொ்ட்ஸ் அலைக்கற்றையில் 5 மெகாஹொ்ட்ஸை 3ஜி சேவைகளுக்கு பயன்படுத்தி வந்தது. இந்த நிலையில், 2100 மெகாஹொ்ட்ஸ் அடுக்கு விரிவாக்கத்துடன் 4ஜி உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மும்பையில் உள்ள நிறுவனத்தின் வாடிக்கையாளா்களுக்கு புதிய நெட்வொா்க் அனுபவத்தை வழங்கும் என்பதுடன் டேட்டா வேகமும் அதிகரிக்கும். எனவே வோடாஃபோன் ஐடியாவின் 3ஜி சேவையில் இணைந்துள்ள மும்பை வாடிக்கையாளா்கள் தங்கள் அருகில் உள்ள நிறுவனத்தின் விற்பனையகங்களை அணுகி 4ஜி சிம்மை இலவசமாக மேம்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என வோடஃபோன் ஐடியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT