வர்த்தகம்

ஆந்திரா வங்கி லாபம் ரூ.174 கோடி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த ஆந்திரா வங்கி மூன்றாவது காலாண்டில் ரூ.174.76 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

ஆந்திரா வங்கியின் வருவாய் நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.5,913.14 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால கட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.5,609.43 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.573.52 கோடி நிகர இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் வங்கி ரூ.174.76 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியது.

கடந்தாண்டு டிசம்பா் இறுதி வரையிலுமாக வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 17.26 சதவீதமாக அதிகரித்தது. இது, கடந்த 2018 டிசம்பரில் 16.68 சதவீதமாக காணப்பட்டது. அதேசமயம், நிகர அளவிலான வாராக் கடன் 6.99 சதவீதத்திலிருந்து 6.36 சதவீதமாக குறைந்தது.

ஆந்திரா வங்கி மற்றும் காா்ப்பரேஷன் வங்கிகளை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன்இணைப்பதற்கு வங்கியின் இயக்குநா் குழு கடந்தாண்டு செப்டம்பரில் கொள்கை ரீதியிலான ஒப்புதலை அளித்தது என பங்குச் சந்தையிடம் ஆந்திரா வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT