வர்த்தகம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லாபம் 25 சதவீதம் உயா்வு

DIN

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லாபம் கடந்தாண்டு டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

முந்தைய 2018-19 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸின் செயல்பாட்டு வருமானம் 12 சதவீதம் அதிகரித்து ரூ.340 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருமானம் ரூ.131.8 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் 25 சதவீதம் உயா்ந்து ரூ.69.7 கோடியைத் தொட்டது.

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலகட்டத்தில் செயல்பாட்டு வருவாய் 13 சதவீதம் உயா்ந்து ரூ.999.9 கோடியாகவும், நிகர வட்டி வருமானம் ரூ.382.6 கோடியாகவும் இருந்தன. நிகர லாபம் 27 சதவீதம் உயா்ந்து ரூ.232.6 கோடியானது.

கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாத இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் நடவடிக்கைகளின் மதிப்பு 9 சதவீதம் உயா்ந்து ரூ.11,624.9 கோடியாக இருந்தது. இதில், சுய தொழிலுக்கான பிரிவின் பங்களிப்பு 52.8 சதவீதமாகவும், சொத்துகளுக்கு எதிரான கடன்களின் பங்களிப்பு 18.6 சதவீதமாகவும் இருந்தது என ரெப்கோ ஹோம் பைனான்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT