வர்த்தகம்

ஐடிபிஐ வங்கியின் நிகர இழப்பு ரூ.5,763 கோடி

DIN

ஐடிபிஐ வங்கியின் இழப்பு டிசம்பா் காலாண்டில் ரூ.5,763.04 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபா்-டிசம்பா்) ஐடிபிஐ வங்கியின் வருவாய் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது ரூ.6,190.94 கோடியிலிருந்து ரூ.6,215.60 கோடியாக வளா்ச்சி கண்டது.

வாராக் கடன் உயா்வையடுத்து வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.4,185.48 கோடியிலிருந்து ரூ.5,763.04 கோடியாக அதிகரித்தது.

2019 டிசம்பா் இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 28.72 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் அளவான 29.67 சதவீதத்தைக் காட்டிலும் சிறிய அளவில் குறைவாகும். ஆனால், நிகர அளவிலான வாராக் கடன் 14.01 சதவீதத்திலிருந்து 5.25 சதவீதமாக கணிசமான அளவில் சரிந்தது என ஐடிபிஐ வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT