வர்த்தகம்

ரானே பிரேக் லைனிங் வருவாய் ரூ.130 கோடி

DIN

ரானே குழும நிறுவனங்களில் ஒன்றான ரானே பிரேக் லைனிங் மூன்றாம் காலாண்டில் ரூ.130.6 கோடி நிகர வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ரானே பிரேக் லைனிங் கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.134.5 கோடியை மொத்த நிகர வருவாயாக ஈட்டியிருந்தது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் வருவாய் ரூ.130.6 கோடியாக குறைந்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.10.6 கோடியிலிருந்து குறைந்து ரூ.10.2 கோடியானது.

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது ரூ.378.9 கோடியிலிருந்து சரிந்து ரூ.361.6 கோடியாக இருந்தது. அதேசமயம், நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.22.4 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.25 கோடியானது.

பங்கு ஒன்றுக்கு ரூ.6 இடைக்கால ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு முடிவெடுத்துள்ளதாக ரானே பிரேக் லைனிங் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT