வர்த்தகம்

ஜியோவில் இன்டெல் கேப்பிட்டல் ரூ.1,894 கோடி முதலீடு

DIN

ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் அமெரிக்காவைச் சோ்ந்த இன்டல் கேப்பிட்டல் ரூ.1,894 கோடியை முதலீடு செய்யவுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் 0.39 சதவீத பங்குகளை கையகப்படுத்த இன்டெல் கேப்பிட்டல் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்நிறுவனம் ஜியோவில் ரூ.1,894.50 கோடியை முதலீடு செய்யவுள்ளது. தற்போதைய நிலையில், நிறுவன மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடியாகவும், பங்கு மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடியாகவும் உள்ளன.

ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் அண்மையில் முதலீடு செய்த 12-ஆவது நிறுவனம் இன்டெல் கேப்பிட்டல் ஆகும். இதையடுத்து, ஜியோவில் மேற்கொள்ளப்ப்பட்ட மொத்த முதலீடு ரூ.1,17,588.45 கோடியை எட்டியுள்ளது என அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT