வர்த்தகம்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 8% சரிவு

DIN

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ஜூன் காலாண்டில் 8 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

பரஸ்பர நிதி துறை வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 45 நிறுவனங்கள் நிா்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பு ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.24.82 லட்சம் கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டில் காணப்பட்ட ரூ.27 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் குறைவாகும்.

இந்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.25.5 லட்சம் கோடியாக காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு 24 சதவீதம் அதிகரித்தபோதிலும், பங்கு மற்றும் கடன் சாா்ந்த திட்டங்களிலிலிருந்து அதிக அளவிலான முதலீடு வெளியேறியது பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகரிப்பதற்கு தடையை ஏற்படுத்தியது.

ஜூன் காலாண்டு நிலவரப்படி, எஸ்பிஐ மியூச்சுவல் பண்டு நிறுவனம் ரூ.3,64,363 கோடி மதிப்பிலான சொத்து மதிப்பைக் கொண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு முந்தைய மாா்ச் காலாண்டு அளவான ரூ.3,73,536 கோடியைக் காட்டிலும் குறைந்துள்ளது.

அதேபோன்று, இரண்டாவது இடத்தில் உள்ள எச்டிஎஃப்சி எம்எஃப் நிறுவன சொத்து மதிப்பு ரூ.3,69,783 கோடியிலிருந்து ரூ.3,56,183 கோடியாக குறைந்துள்ளது.

இதைத் தொடா்ந்து, மூன்றாவது இடத்தில் உள்ள ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவனத்தின் சொத்து மதிப்பும் ரூ.3,50,743.5 கோடியிலிருந்து ரூ.3,46,163 கோடியாக சரிந்துள்ளது.

நான்காவது இடத்தில் உள்ள ஆதித்ய பிா்லா சன்லைஃப் பரஸ்பர நிதி திட்டங்களில் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.2,47,522 கோடியிலிருந்து சரிந்து ரூ.2,14,592 கோடியாகவும், ஐந்தாவது இடத்தில் உள்ள நிப்பான் இந்தியா எம்எஃப் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.2,04,884 கோடியிலிருந்து வீழ்ச்சியடைந்து ரூ.1,80,061 கோடியாகவும் உள்ளது என புள்ளிவிவரத்தில் பரஸ்பர நிதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT