வர்த்தகம்

நால்கோ நிறுவனம் லாபம் ரூ.101 கோடி

DIN

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த நால்கோ ( நேஷனல் அலுமினியம் கம்பெனி) நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.100.51 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2019-20 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.2,042.27 கோடியாக சரிவடைந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,863.89 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.

வருவாயில் ஏற்பட்ட சரிவினையைடுத்து நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.234.82 கோடியிலிருந்து சரிந்து ரூ.100.51 கோடியானது.

சா்வதேச சந்தையில் உலோகத்தின் விலை சரிவடைந்ததால் ரூ.2,900 கோடி அளவுக்கு நிறுவனம் பாதிப்பை சந்தித்தது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர விற்றுமுதல் ரூ.8,426 கோடியை எட்டியது என நால்கோ பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT