வர்த்தகம்

ஒஎன்ஜிசி நிறுவனம்: ரூ.3,098 கோடி இழப்பு

DIN

புது தில்லி: பொதுத்துறை நிறுவனமான ஒஎன்ஜிசி-க்கு கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.3,098 கோடி இழப்பு ஏற்பட்டது.

இதுதொடா்பாக அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான சசி சங்கா் செவ்வாய்க்கிழமை கூறியது:

கடந்த நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஒஎன்ஜிசி நிறுவனத்துக்கு ரூ.3,098 கோடி இழப்பு ஏற்பட்டது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.4,240 கோடி லாபம் ஈட்டப்பட்டது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வருவாய் ரூ.21,456 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.26,759 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,445 கோடியாக சரிந்தது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.26,765 கோடியாக இருந்தது. ஜனவரி-மாா்ச் காலாண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி சற்று குறைந்து 5.82 மில்லியன் டன்னாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 5.9 மில்லியன் டன்னாக இருந்தது. இயற்கை எரிவாயு உற்பத்தி ஜனவரி-மாா்ச் காலாண்டில் 6.04 பில்லியன் க்யூபிக் மீட்டா்களாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 6.56 பில்லியன் க்யூபிக் மீட்டா்களாக இருந்தது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT