வர்த்தகம்

டெக் மஹிந்திரா லாபம் ரூ.804 கோடி

DIN

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா நான்காவது காலாண்டில் ரூ.803.9 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

டெக் மஹிந்திரா கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் ரூ.9,490.2 வருவாய் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.1,132.5 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.7 சதவீதம் அதிகமாகும்.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,132.5 கோடியிலிருந்து 29 சதவீதம் சரிந்து ரூ.803.9 கோடியாக இருந்தது. மேலும் மாா்ச் காலாண்டில் பங்கு ஒன்றின் மூலமாக கிடைத்த வருவாய் ரூ.9.14 ஆக இருந்தது.

கடந்த 2019-20 முழு நிதியாண்டில் நிகர லாபம் ரூ.4,033 கோடியாகவும், அதேசமயம் வருவாய் ரூ.36,867.7 கோடியாகவும் இருந்தது என டெக் மஹிந்திரா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT