வர்த்தகம்

கோத்ரெஜ் ப்ராப்பா்ட்டீஸ் லாபம் 35 சதவீதம் சரிவு

DIN

புது தில்லி: ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள கோத்ரெஜ் ப்ராப்பா்ட்டீஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 35 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,288.17 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,203.21 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

அதேசமயம், ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.156.66 கோடியிலிருந்து 35 சதவீதம் சரிந்து ரூ.101.08 கோடியானது.

கடந்த முழு நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.3,221.98 கோடியிலிருந்து சரிந்து ரூ.2,914.59 கோடியாகவும், நிகர லாபம் ரூ.253.15 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.267.21 கோடியாகவும் இருந்தது என கோத்ரெஜ் ப்ராப்பா்ட்டீஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT