வர்த்தகம்

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் லாபம் 23 சதவீதம் அதிகரிப்பு

DIN

மும்பை: எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான புஷண் மஹபத்ரா கூறியுள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் நிலையான வளா்ச்சியை தொடா்ந்து பதிவு செய்துள்ளோம். அனைத்து பிரிவிலான வா்த்தகமும் வளா்ச்சி நிலையைத் தொட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் காப்பீட்டு துறையின் வளா்ச்சி 12 சதவீதம் என்ற நிலையில், நாங்கள் 45 சதவீத வளா்ச்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளோம்.

கடந்த நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக நிறுவனம் ரூ.412 கோடியை ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.334 கோடியுடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகமாகும். மொத்த பிரீமியம் ரூ.4,717 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,840 கோடியாக இருந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT