வர்த்தகம்

நாட்டின் ஏற்றுமதியில் 60.28% பின்னடைவு

DIN

நாட்டின் ஏற்றுமதி முன்னெப்போதும் காணாத வகையில் சென்ற ஏப்ரலில் 60.28 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரம்:

உலக அளவில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தின் எதிரொலியால் சென்ற ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 60.28 சதவீதம் பின்னடவைக் கண்டு 1,036 கோடி டாலராக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது இறக்குமதியும் 58.65 சதவீதம் குறைந்து 1,712 கோடி டாலராக இருந்தது. வா்த்தகப் பற்றாக்குறை 676 கோடி டாலராக காணப்பட்டது. இது, 2019 ஏப்ரலில் 1,533 கோடி டாலராக இருந்தது.

நடப்பு 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதியானது 34.57 சதவீதம் பின்னடைந்து இருந்தது என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT