வர்த்தகம்

என்டிடிவி-க்கு ரூ.1.88 லட்சம் அபராதம் விதித்தது தேசிய பங்குச் சந்தை

DIN


புது தில்லி: பிரபல செய்தித் தொலைக்காட்சியான நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடெட் (என்டிடிவி) நிறுவனத்துக்கு ரூ.1.88 லட்சத்தை தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) அபராதமாக விதித்தது. நிறுவனத்தின் வாரியக் குழுவுக்கு 6-ஆவது இயக்குநரை நியமிக்க தாமதித்ததையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதே காரணத்துக்காக என்டிடிவி நிறுவனத்துக்கு மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) ரூ.1.88 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட தாமதத்துக்காக இரு பங்குச் சந்தைகளும் தலா ரூ.5,36,900-யை என்டிடிவி-க்கு அபாரதமாக விதித்தன என்பது நினைவுகூரத்தக்கது.

எனினும், கரோனா தொற்று பிரச்னை காரணமாகவே வாரியக் குழுவுக்கு 6-ஆவது இயக்குநரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றும், அபராதத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்று இரு பங்குச் சந்தைகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் என்டிடிவி விளக்கமளித்துள்ளது.

இயக்குநரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படும் என்பது தொடா்பான தகவல்களையும் முன்னதாகவே பங்குச் சந்தைகளுக்கு தெரிவித்துவிட்டோம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT