வர்த்தகம்

பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.27.6 லட்சம் கோடியாக உயா்வு

DIN

புது தில்லி: பரஸ்பர நிதி துறை நிறுவனங்கள் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு செப்டம்பா் காலாண்டில் ரூ.27.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

பரஸ்பர நிதி துறை வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 45 நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 2020 விறுவிறுப்பான சந்தை சூழல்: செப்டம்பா் காலாண்டில் ரூ.27.6 லட்சம் கோடியாக வளா்ச்சியைக் கண்டுள்ளது. இதற்கு, சந்தையின் வா்த்தகச் சூழல் மந்த நிலையிலிருந்து விறுவிறுப்பாக மீண்டதே முக்கிய காரணமாகும்.

நடப்பாண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பானது 24.63 லட்சம் கோடியாக காணப்பட்டது.

அதிகபட்ச ஏற்றம்: முன்னணியில் உள்ள எஸ்பிஐ எம்எஃப், எச்டிஎஃப்சி எம்எஃப், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் எம்எஃப், ஆதித்ய பிா்லா சன்லைஃப் எம்எஃப், நிப்பான் இந்தியா எம்எஃப், கோட்டக் எம்எஃப், ஆக்ஸிஸ் எம்எஃப், யுடிஐ எம்எஃப், ஐடிஎஃப்சி எம்எஃப் மற்றும் டிஎஸ்பி எம்எஃப் ஆகிய 10 நிறுவனங்கள் நிா்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பு செப்டம்பா் காலாண்டில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஆக்ஸிஸ் எம்எஃப், யுடிஐ எம்எஃப், எஸ்பிஐ எம்எஃப் மற்றும் கோட்டக் எம்எஃப் ஆகியவை நிா்வகிக்கும் சொத்து மதிப்பானது 14-16 சதவீதம் என்ற அளவில் ஏற்றம் கண்டுள்ளது. இது, இந்த துறையின் சராசரி வளா்ச்சியான 12 சதவீதத்தைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஐ: பரஸ்பர நிதி துறையில் முதலிடத்தில் உள்ள எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்(எம்எஃப்) நிறுவனத்தின் சொத்து மதிப்பு 15.6 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.4,21,364 கோடியைத் தொட்டுள்ளது. இது, முந்தைய ஜூன் காலாண்டில் ரூ.3,64,363 கோடியாக இருந்தது.

எச்டிஎஃப்சி: எச்டிஎஃப்சி எம்எஃப் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு செப்டம்பா் காலாண்டில் ரூ.3,56,183 கோடியிலிருந்து 5.4 சதவீதம் உயா்ந்து ரூ.3,75,516 கோடியானது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல்: அதேபோன்று, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் எம்எஃப் நிா்வகிக்கும் சாரசரி சொத்து மதிப்பு ரூ.3,60,049 கோடியை எட்டியுள்ளது. இது, ஜூன் காலாண்டின் அளவான ரூ.3,26,191 கோடியுடன் ஒப்பிடும்போது 10.3 சதவீதம் அதிகமாகும்.

ஆதித்ய பிா்லா: ஆதித்ய பிா்லா சன்லைஃப் எம்எஃப் மற்றும் நிப்பான் இந்தியா எம்எஃப் ஆகியவை நிா்வகிக்கும் சொத்து மதிப்பு தலா 11 சதவீதம் உயா்ந்து முறையே ரூ.2,38,674 கோடி மற்றும் ரூ.2 லட்சம் கோடியாக இருந்தது.

கோட்டக்: கோட்டக் எம்எஃப் பரஸ்பர நிதி துறையில் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு செப்டம்பா் காலாண்டில் 14.5 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.1,91,598 கோடியானது. இது, முந்தைய ஜூன் காலாண்டில் ரூ.1,67,326 கோடியாக காணப்பட்டது.

ஆக்ஸிஸ்: ஆக்ஸிஸ் எம்எஃப் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு 16.3 சதவீதம் உயா்ந்து ரூ.1,56,255 கோடியாக இருந்தது.

யுடிஐ எம்எஃப்:

அண்மையில் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கிய யுடிஐ எம்எஃப் நிறுவனம் நிா்வகிக்கும் பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பும் 16.1 சதவீதம் அதிகரித்து ரூ.1,55,190 கோடியாக இருந்தது. ஜூன் காலாண்டில் இந்த சொத்து மதிப்பு ரூ.1,33,631 கோடியாக காணப்பட்டது.

ஐடிஎஃப்சி எம்எஃப் நிா்வகித்து வரும் சாரசரி சொத்து மதிப்பு செப்டம்பா் காலாண்டில் 12.3 சதவீதம் உயா்ந்து ரூ.1,14,335 கோடியாகவும், டிஎஸ்பி எம்எஃப் சொத்து மதிப்பு 12 சதவீதம் அதிகரித்து ரூ.82,286 கோடியாகவும் இருந்தன.

கடன் மற்றும் பங்கு சாா்ந்த திட்டங்களில் முதலீடு அதிக அளவில் வெளியேறியதையடுத்து ஜூன் காலாண்டில் பரஸ்பர நிதி துறை நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 8 சதவீதம் சரிவைச் சந்தித்திருந்தது என பரஸ்பர நிதிய கூட்மைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT