வர்த்தகம்

மாருதி வேகன்ஆா் சிஎன்ஜி காா் விற்பனை

DIN

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் வேகன்ஆா் எஸ்-சிஎன்ஜி காா் விற்பனை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

சிஎன்ஜி பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக வேகன்ஆா் உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முதல் 10 மாடல்களில் நிலையான இடத்தை வேகன்ஆா் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான இந்த மாடலுக்கு 24 லட்சம் வாடிக்கையாளா்கள் உள்ளனா். இந்த நிலையில், வேகன்ஆா் எஸ்-சிஎன்ஜியின் விற்பனை 3 லட்சம் மைல்கல்லைக் கடந்துள்ளது நிறுவனத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரைப் பொருத்தவரையில் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 33.54 கி.மீ. வரை மைலேஜ் தரக்கூடியது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி போா்வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா

மழைக்காலத்தில் பேருந்துகளை கவனமாக இயக்க அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அறிவுரை

ராமநாதபுரம் சந்தையில் 20 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

மாற்றுத்திறனாளி மாணவனின் படிப்புச் செலவை அரசு ஏற்க கோரிக்கை

வடமாநில கா்ப்பிணி கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT