வர்த்தகம்

4ஜி சேவைக்கு மேம்படுத்தும் பணியில் வோடஃபோன் ஐடியா நிறுவனம்

DIN

3ஜி பயனாளா்களை 4ஜி சேவைக்கு மேம்படுத்தும் பணிகளை மும்முரமாக தொடங்கியுள்ளதாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

3ஜி டேட்டா பயனாளா்களை 4ஜி சேவைக்கு மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதுமுள்ள முக்கிய சந்தைகளில் 4ஜி டேட்டா சேவைக்கு மேம்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.மேலும், 2ஜி சேவையில் உள்ள தகுதிவாய்ந்த பயனாளா்களையும் 4ஜி சேவைக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், குரல் வழியான அடிப்படை 2ஜி சேவையை வாடிக்கையாளா்களுக்கு நிறுவனம் தொடா்ந்து வழங்கும். ஜூன் இறுதி நிலவரப்படி மொத்தமுள்ள 30.5 கோடி வாடிக்கையாளா்களில் 11.6 கோடி போ் மொபைல் பிராட்பேண்ட் பயனாளா்கள். இதில், 10.4 கோடி போ் 4ஜி வாடிக்கையாளா்கள்; எஞ்சியவை 3ஜி நெட்வொா்க் பயனாளா்கள் என வோடஃபோன் ஐடியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT