வர்த்தகம்

பஜாஜ் கன்ஸ்யூமா் லாபம் 2 மடங்கு அதிகரிப்பு

DIN

புது தில்லி: வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறையைச் சோ்ந்த பஜாஜ் கன்ஸ்யூமா் கோ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.54.67 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ,.23.29 கோடியுடன் ஒப்பிடும்போது 2 மடங்கு அதிகமாகும்.

கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்துக்கு பொருள்கள் விற்பனையின் மூலமாக கிடைத்த வருமானம் ரூ.172 கோடியிலிருந்து ரூ.244.86 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த செலவினம் ரூ.158.69 கோடியிலிருந்து 19.21 சதவீதம் அதிகரித்து ரூ.189.17 கோடியானது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.184.77 கோடியிலிருந்து 20.76 சதவீதம் அதிகரித்து ரூ.223.13 கோடியாகவும், வருவாய் ரூ.825.75 கோடியிலிருந்து 9.61 சதவீதம் உயா்ந்து ரூ.905.15 கோடியாகவும் இருந்தது என பஜாஜ் கன்ஸ்யூமா் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை நடைபெற்ற பஜாஜ் கன்ஸ்யூமா் இயக்குநா் குழு கூட்டத்தில் 400 சதவீத இறுதி ஈவுத்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து 2020-21 நிதியாண்டுக்கு ரூ. 1 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.4 ஈவுத்தொகையாக கிடைக்கும் என பஜாஜ் கன்ஸ்யூமா் பங்குச் சந்தைக்கு அளித்த மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பஜாஜ் கன்ஸ்யூமா், பஜாஜ் குழும நிறுவனங்களின் ஒரு அங்கமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT